நாமக்கல் கொல்லிமலை மலைத்தேன் – ARR FOODS
நாமக்கல் மாவட்டம்
நாமக்கல் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள ஒரு நகரமும் அதே பெயருடைய மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இது ஒரு நகராட்சி ஆகும். நாமக்கல் நகராட்சி ஆசியாவின் முதல் மிஷிளி 140012004 தரச்சான்றிதல் பெற்றதாகும். இது “குப்பை இல்லா நகரம் ” என்னும் சிறப்பை பெற்றதாகும். 2011ல் நகராட்சியானது. கொண்டிசெட்டிபட்டி, கொசவம்பட்டி, பெரியப்பட்டி, காவேட்டிபட்டி, நல்லிபாளையம் , அய்யம்பாளையம், தும்மங்குருச்சி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், முதலைப்பட்டி, சின்ன முதலைப்பட்டி ஊர்களை இணைத்து விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனால் நகர்மன்றங்களின் எண்ணிக்கை 30லிருந்து 39 ஆக உயர்ந்துவிட்டது.
நாமக்கல் மலைக்கோட்டை
நாமக்கல் கொல்லிமலை மலைத்தேன் – ARR FOODS
நாமக்கல் வரலாறு
“நாமகிரி” என்று அழைக்கப்படும் 65 மீ உயர மிகப் பெரிய ஒற்றைப் பாறை நகரின் நடுவில் உள்ளது. நாமகிரி என்ற பெயரிலிருந்து நாமக்கல் என்ற பெயர் உருவானது. இவ்வூரின் பழைய பெயர் “ஆரைக்கல்” என்பதாகும். இப்பெயர் பல கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளது. இந்தப் பாறையுன் மீது கோட்டை ஒன்று உள்ளது. இதை ராமச்சந்திர நாயக்கர் கட்டியது என கருதப்படுகிறது. இதை மைசூர் அரசின் ஆதிகாரி லட்சுமி நரசய்யா அமைத்தார் என்ற கருத்தும் நிலவுகிறது. பின்னாளில் திப்பு சுல்தான் இப்பாறைக் கோட்டையுலிருந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து சண்டையிட்டார் என்றும் நம்பப்படுகிறது. மகாத்மா காந்தி அவர்களின் பொதுக்கூட்டம் இப்பாறை அருகே நடைபெற்றது. அரிசனம் இயக்கத்திற்கு ஆதரவு வேண்டி 1934 பிப்ரவரி 14 அன்று நாமக்கலில் மகாத்மா காந்தி பேசிய கூட்டத்திற்கு 15,000 மக்கள் வந்திருந்தனர்.
இப்பாறையின் ஒரு புறம் அரங்கநாத பெருமாள் குகைக்கோயில் உள்ளது, மறுபுறம் நரசிம்ம பெருமாள் குகைக்கோயில் உள்ளது. இக்கோயில்கள் கிபி 784ல் அதியமான் மரபைச்சேர்ந்த குணசீலன் கட்டியதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
நாமக்கல் அமைவிடம்
நாமக்கலின் அமைவிடம் 11.23º N 78.17º E ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 218 மீட்டர் (715 அடி) உயரத்தில் இருக்கின்றது. கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள கொல்லி மலைக்கு இது அருகில் அமைந்துள்ளது. நாமக்கல் அருகிலுள்ள ஆறு காவிரி. நாமக்கல்நகரம் நகரம் பின்வரும் நகரங்களில் இருந்து குறிப்பிடத்தக்க தொலைவில் அமைந்துள்ளது (தொலைவு தோராயமாக).
- சென்னைக்கு தென் மேற்கே 360 கி.மீ. தொலைவில் உள்ளது.
- பெங்களூருக்கு தெற்கே 250 கி.மீ. தொலைவில் உள்ளது.
- கோயம்புத்தூருக்கு கிழக்கே 150 கி.மீ. தொலைவில் உள்ளது.
- ஈரோட்டிற்கு கிழக்கே 55 கி.மீ. தொலைவில் உள்ளது.
- கரூருக்கு வடக்கே 48 கி.மீ. தொலைவில் உள்ளது.
- சேலத்திற்கு தெற்கே 55 கி.மீ. தொலைவில் உள்ளது.
- திருச்சிக்கு வடகிழக்கே 84 கி.மீ. தொலைவில் உள்ளது.
நாமக்கல் பொருளாதாரம்
உள்ளூர் மக்களின் சுய முயற்சியால் சரக்கு போக்குவரத்து துறையில் நாமக்கல் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. 10,000 க்கும் அதிகமான லாரி (Lorry) என்னும் சுமையுந்து வண்டிகள் இங்கு உள்ளன. நாமக்கல் நகரம், சுமையுந்து வண்டிகளின் உடல் அமைப்பைக் கட்டுவதில் இந்தியா முழுவதிலும் புகழ் பெற்றது. இங்கு சுமையுந்து தொடர்பான பட்டறை என்னும் தொழில் கூடங்கள் ஏராளமாக உள்ளன. தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம் இங்கு உள்ளது. நகர்ப்புறத்தில் சுமையுந்து தொழில் சிறப்படைந்ததை போல கிராமப்பகுதியில் கோழி வளர்ப்பு சிறப்படைந்துள்ளது. கோழி வளர்ப்பில் நாமக்கல் மண்டலம் இந்தியாவில் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. முட்டை உற்பத்தியில் நாமக்கல் மண்டலம் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இது தொடர்பான கோழி – மாடு தீவன (Feeds) ஆலைகள் பத்துக்கும் மேல் இங்கு உள்ளன. தமிழகத்தின் ஒட்டு மொத்த முட்டை உற்பத்தியில் நாமக்கல் மண்டலம் 90 விழுக்காட்டை பூர்த்தி செய்கிறது. இங்கு மரவள்ளிக்கிழங்கிலிருந்து தயாரிக்கப்படும் சேக்கோ (Sago) எனப்படும் ஜவ்வரிசி ஆலைகள் அதிக அளவில் உள்ளன.