அற்புத பலன்கள்:
இயற்கையின் வரப்பிரசாதம் என்றல், அது தேன் தான். மலர்களின் கருவறையில் உற்பத்தி ஆகின்ற தேன், தேனீக்களால் சேகரிக்கப்பட்டு மனிதர்களின் உணவுப்பொருலாக மாறுகிறது. பூச்சிகளால் தயார் செய்யப்பட்டு மனிதனால் உட்கொள்ளப்படும் ஒரே உணவுப் பொருளும் இந்த தேன் மட்டும் தான்.
என்ன வைட்டமின்கள் உள்ளது தேனில்:-
தேனில் அதிக அளவு வைட்டமின்கள் கலந்துள்ளது. முக்கியமாக வைட்டமின் பி1, பி2, சி,பி3 போன்ற வைட்டமின்களும், தாமிரம்,அயோடின் போன்ற சத்துக்களும் உள்ளது. இது நம் உடலுக்கு தேவையான ஆற்றலை தரும். மேலும் இதில் ப்ருக்டோஸ்,க்ளுகோஸ், மற்றும் மெக்னிசியம் கலந்துள்ளது. இது நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவும்.
ஃப்ரக்டோஸ் மற்றும் க்ளுகோஸ் போன்ற சத்துக்கள் தேனில் அதிகம் உள்ளது. குறிப்பாக தேனில் கொழுப்புச் சத்து சிறிதும் இல்லை என்பது கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை.
உடல் வலுப்பெற உதவும் தேன்:-
தினமும் ஒரு அவுன்ஸ் தேன் பருகினாலே, பெரிய அளவில் வித்தியாசத்தை நமது உடலில் ஏற்படுத்தும் ஆற்றல் தேனிற்கு உண்டு. தினமும் தேன் சாப்பிட்டால் ஆச்சர்யப்படும் அளவுக்கு உங்கள் சக்திநிலை உயரும்.
உடல் எடை குறைய உதவும் தேன்(Weight Loss):-
நம்மில் பலருக்கு உள்ள பொதுவான பிரச்சனைகளில் ஒன்று தான் இந்த அதிக உடல் எடை மற்றும் தொப்பை. அதிகமான எடையை குறைக்க நாம் அனைவரும் பல செயற்கையான வழிமுறைகளை பின்பற்றி வருகிறோம். அனால் எதிர்பார்த்த பலன் கிடைத்திருக்காது .
- எடையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் தேனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கொலுப்புகளை எரித்து உடல் எடையை சீராக வைத்து கொள்ள தேன் உதவும். தினமும் தேன் பருகினால் உங்கள் செயல் திறன் முன்னெப்போதையும்விட உற்சாகமாக இருப்பதை உணர்வீர்கள்.
- வெந்நீரில் கலந்து தேனைப் பருகினால், உடலில் கொழுப்புச் சத்து கரையும், குளிர் நீரில் தேனைக் கலந்து பருகினால், உடலில் கொழுப்புச் சத்து கூடும் என்றும் நம்பிக்கை உள்ளது.
இருமலுக்கு நல்ல மருத்துவம் தேன் தான்:-
சரியான அளவு தேனுடன் இஞ்சி சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் நமக்கு இருக்கு தீராத சளி, மற்றும் இருமல் நீங்கும். தினமும் சிறிதளவு தேனுடன் இந்த இஞ்சியை சேர்த்து சாப்பிட்டு வர மார்புசளி பிரச்சனையில் இருந்தும் விடுபடலாம்.
ஆஸ்துமா உள்ளவர்களுக்கு தேன் மிக உகந்தது. அது உடலுக்குத் தேவையான உஷ்ணத்தை வழங்குகிறது. வெந்நீரில் தேனையும் மிளகையும் கலந்து பருகினால், ஆஸ்துமா பாதிப்பைச் சுலபமாகத் தள்ளிப் போடலாம். தொடர்ந்து இப்படிப் பருகுவதன் மூலம் முழுமையாக ஆஸ்துமாவிலிருந்து விடுபடவும் வாய்ப்புண்டு.